ஆரோக்கிய சமையல்: மசாலா இடியாப்பம்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
idiyappam 1 - 2026

மசாலா இடியாப்பம்

தேவையான பொருட்கள்
இடியாப்பம் – 1 கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
புதினா. – சிறிது
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா. – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி. – சிறிது
உப்பு. – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பட்டை. – 1/4 இன்ச்
கிராம்பு. – 2
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் இடியாப்பம் செய்து, அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் உதிர்த்து, குளிர வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் தக்காளி, புதினா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின்பு அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இறுதியில் அதிலல் இடியாப்பத்தை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவினால், மசாலா இடியாப்பம் ரெடி!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.