பெண்கள் பள்ளிப்படிப்பை முடித்தால் ரூ.25000 டிகிரி முடித்தால் ரூ.50000! முதல்வர் அறிவிப்பு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
degree-2
degree-2

பள்ளிப்படிப்பு முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.

பீகாரில் மாநிலத்தில், பெண் கல்வி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, “கன்யா உத்தன் யோஜனா என்ற திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது

இந்த திட்டத்தின்படி, திருமணமாகாத பெண்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்படி பள்ளிப் படிப்பை நிறைவுசெய்த பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பை நிறைவு செய்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2021-22 ஆம் ஆண்டில் திருமணமாகாத பெண்களுக்கு வழங்கும், கல்வி உதவித் தொகையை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.

பீகாரில் கல்வித்துறையின் இந்த மசோதாவிற்கு மாநில அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இந்தத் திட்டத்தால், அம்மாநிலத்தில் உள்ள 1.6 கோடி பெண்கள் பயனடைவார்கள் என்று அம்மாநில அரசு புள்ளி விவரமாக வெளியிட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் மூலம், பெண் குழந்தைகள் திருமணத்தை தடுக்கவும், பெண்களின் உயர் கல்வியை ஊக்கப்படுத்தவும் இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் அமையும் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.