பாரம்பரிய உடையில் நயனும் சிவனும்! வைரலாகும் புகைப்படம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
nyayan
nyayan

திரைப்பட விழாவில் பட்டுப்புடவையில் நயன்தாராவும், வேட்டி, சட்டையில் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களையும் தயாரித்து வருகிறார்கள். அவ்வாறு இவர்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் கூழாங்கல்.

nyayan-sivan-1
nyayan-sivan-1

அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தற்போது கூழாங்கல் திரைப்படம் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டுள்ளது. இந்த விழாவில் பட்டுப்புடவையில் நயன்தாராவும், வேட்டி, சட்டையில் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டுள்ளனர் .

தனது படக்குழுவினருடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டுள்ள நயன் மற்றும் விக்கியின் அந்த அழகான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.