கப்பற்படை தினத்தில்..! ராணி அபாக்கா சவ்டா பெயர் ஏன் கப்பலுக்கு சூட்டப் பட்டது தெரியுமா?!

அடடே... அப்படியா? கட்டுரைகள் சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
abbakka chowta - 2026

16ஆம் நூற்றாண்டின் மத்தியில் போர்ச்சுகீசிய காலனியாதிக்கம் உச்சத்திலிருந்த சமயம்… 1555இல்…

கேரள ஜமோரின் வம்ச மன்னர்களை வென்று, பின்பு சென்னை மயிலாப்பூரை கைப்பற்றி கபாலீஸ்வரர் கோவிலை தரைமட்டமாக்கினார்கள்! வடக்கு நோக்கி நகர்ந்தவர்கள் பீஜப்பூர் சுல்தானையும் தோற்கடித்து பம்பாயை கைப்பற்றினார்கள், பின்பு கோவாவை தலைமையிடமாக மாற்றினார்கள்.

அப்பொழுது அவர்களின் குறி அதிக வருமான ஈட்டக்கூடிய மங்களூர் துறைமுகம். அதைக் கைப்பற்ற வேண்டும் என்றால் 14 மைல் தொலைவில் அமைந்துள்ள உள்ளல் என்ற துளு நாட்டை கைப்பற்ற வேண்டும்!

துளு நாட்டை ஆண்ட அரசி ராணி அபாக்கா சவ்டாவை குறைவாக மதிப்பிட்டு ஒரு சிறிய படையை அனுப்பி அவரை கைது செய்து கோவா கொண்டு வர ஆணையிட்டார்கள்!

ஆனால், உள்ளல் ராஜ்ஜியத்திற்கு சென்ற போர்ச்சுகீசிய படை உயிருடன் திரும்பவே இல்லை.

The only woman in history to confront fight and repeatedly defeat the Portuguese for four decades. - 2026

அதிர்ச்சியில் உறைந்த போர்ச்சுகீசிய ராணுவம் இம்முறை பெரும் கப்பற்படையை Admiral Dom Álvaro da Silveira தலைமையில் அனுப்பிவைத்தது.. இம்முறையும் படுதோல்வி! படையை தலைமை தாங்கிய அட்மிரல் உயிருக்கு போராடிய நிலையில் வெறுங் கையுடன் திரும்பினார்.

இப்பொழுது போர்ச்சுகீசிய ராணுவம் தங்களது திட்டத்தை மாற்றியது! முதலில் மங்களூர் துறைமுகத்தை கைப்பற்றிவிட்டு பின்பு உள்ளல் ராஜ்யத்தை கைப்பற்றி அழிக்க முடிவு செய்தது..

அவர்களின் திட்டப்படி போர்ச்சுகீசியரான மிவவும் அனுபவம் வாய்ந்த தளபதி João Peixoto என்பவருடன் ஒரு பெரும் படை மங்களூர் துறைமுகத்தை முற்றுகையிட்டு துறைமுகத்தை தரைமட்டமாக்கினார்கள்!

பின்பு உள்ளல் நோக்கி பெரும்படை நகர்ந்தது. அவர்களது எண்ணம் ஒரு சிறிய நாட்டின் ராணி தங்களது பெரும்படை மற்றும் நவீன ஆயுதங்களுக்கு முன்னால் ஒன்றுமேயில்லை என்பதுதான்.

போர்த்துகீசிய பெரும்படை உள்ளலை நோக்கிச் சென்றது! ஆனால் ஆச்சரியம் இம்முறை எந்த எதிர்ப்புமில்லாமல் உள்ளல் ராஜ்ஜியம் வீழ்ந்தது! போர்ச்சுகீசியர்கள் கொண்டாட்டம் களைகட்டியது..

உள்ளல் ராஜ்யத்தை தரைமட்டமாக வேண்டும் என்று அதன் தளபதி உத்தரவிட்டான். அதன் ராணி அபாக்கா சவ்டாவை தேடினார்கள். ராணி அபாக்கா சவ்டா பதுங்கியது பாயத்தான் என்று தெரியாத போர்ச்சுகீசிய ராணுவம் கொண்டாடிக் கொண்டிருந்தது!

தனது ராணுவத்தின் கைதேர்ந்த 200 வீரர்களை தேர்ந்தெடுத்த 30 வயது ராணி அபாக்கா சவ்டா அந்தப் படைக்கு தான் தலைமையேற்றார்!

போர்ச்சுகீசிய பெரும்படையை சுற்றி வளைத்து தாக்கினார்.. போர்ச்சுகீசிய தளபதி கொல்லப்பட்டார்! 70 போர்ச்சுகீசியர்கள் கைது செய்யப்பட்டார்கள். போர்ச்சுகீசிய வீரர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்!

மிச்சம் மீதி இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தார்கள். சரி… நாம்தான் ராஜ்யத்தை கைப்பற்றிவிட்டோமே அது போதும் என்று ராணி அபாக்கா சவ்டா நினைத்து போரை நிறுத்தியிருப்பார் என்று தானே நினைப்போம்… ஆனால் அது தான் இல்லை!

abbakka pic2 - 2026

அன்று இரவே தனது அனைத்து படைகளையும் ஒருங்கிணைத்து மங்களூர் துறைமுகத்தை தாக்கினார். தன் பெரும் படைகளுடன் துறைமுகத்திற்குச் சென்ற ராணி அபாக்கா சவ்டா அங்கிருந்த போர்ச்சுகீசிய தலைமை தளபதி Admiral Mascarenhas என்பவரை கொன்று, தனது வெற்றிக்கொடியை அங்கே பறக்கவிட்டார்.

அதோடு விடவில்லை… மங்களூர் துறைமுகத்துக்கு வடக்கே 100 மைல் தொலைவிலிருந்து போர்ச்சுகீசிய பெரும் ராணுவத் தலத்தை தாக்கி ஒரே வாரத்தில் தரைமட்டமாக்கினார்.

போர்ச்சுகீசிய ராணுவத்தை எதிர்த்து ஒரு வருடம் இரண்டு வருடமல்ல நாற்பது வருடம் போரிட்டார்! வீரத்தால் ராணியை வெல்லமுடியாது என்று தீர்மானித்த போர்ச்சுகீசியர்கள் வழக்கம் போல், துரோகத்தால் வெல்ல நினைத்தார்கள்! அதற்கு அவர்கள் வைத்த குறி, ராணியின் கணவர்.

மகாராணியை கணவன் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும்போது போர்ச்சுகீசிய ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது! இருந்தும் ராணியின் படை சிறையை தாக்கி மஹாராணியை மீட்டது. அவர்கள் தப்பிச்செல்லும் வழியில் போர்ச்சுகீசிய பீரங்கி குண்டுகளின் இடைவிடாத குண்டுமழைக்கு இரையனார் இந்த வீர மங்கை.

இந்திய அரசாங்கம் அவருக்கு ஒரு தபால் தலை வெளியிட்டது! இந்திய கடலோர காவல்படை கப்பலுக்கு அவரது பெயரை சூட்டியது !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.