பூங்காவில் மதியம் இரண்டரை மணிக்கு ஜாக்கிங் சென்ற 14 வயது சிறுமி! நேர்ந்த கொடூரம்!

உலகம் கிரைம் நியூஸ் சற்றுமுன்
good-mayes-park
good-mayes-park

பூங்காவில் தனியாக சென்ற சிறுமியை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் இருக்கும் Ilford என்ற பகுதியில் Goodmayes பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் 2 30 மணியளவில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் ஜாக்கிங் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இங்கிருந்து மர்ம நபர் ஒருவர் சிறுமியை வற்புறுத்தி புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பின்பு உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியுள்ளதாவது, அந்த மர்மநபர் 17 முதல் 20 வயதுக்குள் இருப்பார், மீசையை மெலிதாக வைத்திருப்பார் என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போதுவரை இச்சம்பவம் தொடர்பில் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் டிடெக்டிவ் அதிகாரியான Gemma Morris என்பவர் கூறியுள்ளதாவது, சம்பவம் நடைபெற்ற இந்த பூங்காவில் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய இடம். ஆகவே இது தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.