லவ் ஜிகாத்தில் ஈடுபட்ட ஆசிரியர்! ட்யூஷன் படிக்க சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
teacher-and-student
teacher-and-student

உ.பி.யின் மீரட்டைச் சேர்ந்த 25 வயது தனியார் பள்ளி ஆசிரியர் அமான் என்ற நபரிடம் 17 வயது மாணவி ட்யூஷன் படிக்கச் சென்றார். அந்த மாணவி 12ம் வகுப்பில் படிப்பதால் அவரின் பெற்றோர்கள் அவரை இந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் வாங்க கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அதனால் வகுப்பில் மட்டும் படித்து அதிக மார்க் எடுக்க முடியாது என்று நினைத்த அந்த மாணவி, அந்த இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஆசிரியரிடம் டியூஷனுக்கு சென்றார். ஆனால் அந்த 25 வயதான அமான், அந்த மாணவியை நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அந்த மாணவி அந்த ஆசிரியரை காதலிக்க மறுத்துள்ளார். பின்னர் அந்த ஆசிரியர் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்கவில்லையென்றால் அவரின் தம்பியை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த மாணவியை தங்களின் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டால் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

tajmahal
tajmahal

அதனைக் கேட்டு அந்த மாணவியும் தினமும் டியூஷனுக்கு சென்று அவரோடு காதல் பாடம் படித்துள்ளார். இதற்கிடையே அந்த மாணவியின் காதல் பற்றி அவரின் பெற்றோருக்கு தெரிய வந்ததுள்ளது.

அதனால் அந்த மாணவியை கண்டித்துள்ளார்கள். உடனே அந்த ஆசிரியர் அந்த மாணவியை அழைத்து கொண்டு தில்லிக்கு ஓடிவிட்டார். மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கூறியுள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசிரியரையும் அந்த மாணவியையும் தில்லியில் கைது செய்தார்கள்.

அந்த மாணவியிடம் போலீசார் விசாரிணை செய்த போது தன்னை அவர் தில்லியில் உள்ள ஒரு மசூதியில் வைத்து இஸ்லாம் மதத்திற்கு மாறச்சொல்லி கட்டயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.