மசாஜ் சென்டரில் நடந்த மசா வேலை! அதிரடி சோதனையில் சிக்கிய ஓனர்! 14 பெண்கள் மீட்பு!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
ayurvedic-massage-center
ayurvedic-massage-center

ஒரு ஸ்பா சென்டரில் விபச்சாரம் செய்த 14 மீட்ட போலீசார் அந்த பெண்களை புனர் வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார்கள் .

தில்லிக்கு அருகிலுள்ள நொய்டா செக்டர் 18 இல் உள்ள வேவ் மாலில் ஒரு அழகு நிலையத்தில் பல பெண்கள் அங்கு வரும் ஆண் வாடிக்கையாளர்களுக்கு மசாஜ் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்துள்ளார்கள்.

அந்த ஸ்பா சென்டரின் உரிமையாளர், ஏழ்மை நிலையிலிருக்கும் பல பெண்களை குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு அழைத்து வந்து இப்படி பலான வேலையில் ஈடுபடுத்தியுள்ளார். அதனால் அந்த பகுதியில் வசிக்கும் பல ஏழை பெண்கள் அங்கு மசாஜ் வேலை செய்வதாக வீட்டில் சொல்லிவிட்டு, வீட்டுக்கு தெரியாமல் இப்படி விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்..

பல பெண்கள் தங்களின் குழந்தைகளின் படிப்பு செலவுக்கும், குடும்ப செலவுக்கும் கூட காசில்லாமல் இப்படி இந்த அழகு நிலையத்தில் வேலைக்கு சேர்ந்து, வயிற்றுப்பசிக்காக பலரின் உடல் பசியை தீர்ப்பதாக கூறினார்கள்.

இப்படி அந்த ஸ்பா சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. மேலும் பல பணக்கார இளைஞர்கள் அங்கு வந்து அங்கிருக்கும் பல பெண்களிடம் பணத்தை கொட்டினாலும் அவர்களுக்கு குறைந்த அளவு கூலி வழங்கப்பட்டுள்ளது. வருமானத்தில் பெரும்பகுதியை அந்த ஸ்பா உரிமையாளரே எடுத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

போலீசார் அங்கு அதிரடி சோதனையை கடந்த வியாழக்கிழமையன்று மேற்கொண்டாரகள். அப்போது அங்கிருந்த 14 அழகிகளை மீட்டுள்ளார்கள். அங்கிருந்த சில வாடிக்கையாளர்களையும், அந்த ஸ்பா சென்டர் ஓனரையும் கைது செய்துள்ளனர். பின்னர் அந்த ஸ்பா சென்டரை வாடகைக்கு விட்டவருக்கும் போலீசார் நோட்டிஸ் அனுப்பி, அந்த பாதிக்கப்பட்ட பெண்களை புனர் வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.