அஜித்தின் அன்பு சரக்கு! அதிரடி பதில் கொடுத்த இயக்குநர்!

சற்றுமுன்
ajith
ajith

கோலிவுட்டில் நிறைய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித் குமார். இவருக்கு என்று பிரத்தியேக ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி பிளாக்பஸ்டர் கொடுத்த திரைப்படம்தான் மங்காத்தா. இந்தப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது. மங்காத்தா திரை படத்தில் அர்ஜுன், திரிஷா, லட்சுமிராய், பிரேம்ஜி, அஞ்சலி, வைபவ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பர்.

மங்காத்தா திரைப்படத்தின் வீடியோ படத்தின் இறுதியில் காண்பிக்கப்பட்டது.
அதில் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுக்கும் பொழுது நடிகர் அஜித் உல்லாசமாக நடனமாடும் வீடியோ வைரலாகியது.

இந்த வீடியோவை தற்போது இணையத்தில் பகிர்ந்த நெட்டிசன் ஒருவர் ப்ரோ அது என்ன சரக்கு என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு இயக்குனர் வெங்கட்பிரபு அவரது அன்பு என்ற சரக்கு என்று பதிலளித்து, மை டியர் தல என்று ஹேஷ் டேக்குடன் பகிர்ந்திருக்கிறார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.