திருப்பரங்குன்றம் கோயிலில் மீண்டும் தங்க ரதம்!

அடடே... அப்படியா? ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
thiruparankundram-golden-chariot
thiruparankundram-golden-chariot

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முதல் மீண்டும் தங்க ரதம் புறப்பாடு நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஓர் ஆண்டாக ஓடாத தங்கத் தேர் தை அமாவாசையான நேற்று திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்தது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கரதம் இழுத்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிலையில், தங்கரதம் புறப்பாடாகி, திருவாட்சி மண்டபத்தை சுற்றி வலம் வந்தது..

திருக்கோயில் உள்ள தங்க ரதம் இழுக்க ஒருவருக்கு ரூ. 2 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடை உத்தரவிற்கு பின் தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சில தினங்களுக்கு முன் அர்ச்சனை, பாலபிஷேகம், பூ, மாலை சாத்துப்படி, சண்முகார்ச்சனை, உபய திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற்றன.

இந்நிலையில் பிப்., 11 முதல் மீண்டும் தங்க ரதம் புறப்பாடு செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த ஓர் ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்ட தங்க ரதம் பழுதுநீக்கப்பட்டு, சுவாமி இன்றி முன்னதாக கடந்த வாரம் சோதனை ஓட்டமாக திருவாட்சி மண்டபத்தை வலம் வந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.