இறைச்சி உண்பவரா? மருத்துவர்கள் தரும் எச்சரிக்கை!

உலகம் சற்றுமுன்
china-2
china-2

சீனாவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வாங் சீனாவை சேர்ந்தவர். இவருக்கு 36 வயது. இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இவர் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். சிறிது நாட்களில் அடிக்கடி இடது கையும், காலும் மரத்துப் போய் உள்ளது. இதனால், வாங்கிற்கு எந்த வேலையும் செய்ய முடியாமல் அவதி பட்டுள்ளார்.

Worm-1
Worm-1

அடிக்கடி மயங்கி விழ ஆரம்பித்துள்ளார். இதனால் அவரது குடும்பம் மிகவும் சோகத்தில் இருந்துள்ளனர். மேலும், வாங்கை சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர்கள் அழைத்துப் சென்றனர்.

பல இடத்தில் பல சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் எந்த பலனும் இல்லை. பின்பு, ஒரு மருத்துவமனை அவரது மூளையை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கூறினார். அதனால் அவரது தலையில் ஸ்கேன் செய்ய பட்டது.

அந்த ஸ்கேன் ரேபோர்டில் அவரது மூளையில் ஒரு நாடாப்புழு உயிரோடு இருப்பது தெரிய வந்ததுள்ளது. இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரின் மூலையில் இருந்த அந்த புழு, வாங்கின் மூளையை கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடத் துவங்கிஉள்ளது. இதனால் தான் அவருக்கு வலிப்பு, மயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு இருந்தது.

Worm-in-the-brain
Worm-in-the-brain

மேலும், மருத்துவர்கள் வாங்கின் தலையில் உயிரோடு இருந்த அந்த புழுவை ஆப்ரேசன் செய்து அகற்றினர்.

அந்த புழு ஐந்து இஞ்ச் நீளத்தில் இருந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக வாங்கின் மூளையில் வாழ்ந்திருக்கிறது. வாங் நத்தைகளை விரும்பி சாப்பிட கூடியவர் அதனால் கூட வாங்கிற்கு இந்நோய் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறினார்.

முறையாக வேகவைக்காத இறைச்சி மூலமாக இந்த புழு மனிதனுக்கு பரவும் வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.