இவங்க எல்லாம் குடும்ப அட்டையை திரும்ப ஒப்படைக்க வேண்டும்! மீறினால் நடவடிக்கை.. அரசு அதிரடி!

இந்தியா சற்றுமுன்
ration-card-with-athar
ration-card

டிவி, ஃப்ரிட்ஜ், பைக் அல்லது ஐந்து ஏக்கர் நிலத்தை சொந்தமாக வைத்திருக்கும் நபர்களிடம், வறுமைக் கோட்டுக்கு கீழே (பிபிஎல்) ரேஷன் கார்டுகள் இருந்தால் அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடக உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை அமைச்சர் உமேஷ் கட்டி செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர் ” வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள (Below Poverty Line – BPL) அட்டை வைத்திருப்பதற்கான அளவுருக்கள் உள்ளன. அவர்களிடம் ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம், பைக், டிவி அல்லது ஃப்ரிட்ஜ் ஆகியவை இருக்கக்கூடாது. இந்த அளவுருக்களில் தகுதி இல்லாதவர்கள் பிபிஎல் ரேஷன் அட்டைகளைத் திருப்பித் தர வேண்டும், இல்லையென்றால் நாங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார்.

ஆண்டுதோறும் ரூ .1.20 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் பிபிஎல் ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்தக்கூடாது என்றும் மார்ச் 31-க்கு முன்னர் அதை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.