வித்தியாசமான ரிச் டேஸ்ட் சேமியா பாயசம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Vermicelli pudding - 2026

சேமியா பாயசம்
தேவையான பொருட்கள்
பால் – அரை லிட்டர்
நொறுக்கிய சேமியா – கால் கப் (அ) ஒரு கைப்பிடி
ஏலக்காய் – 3
பாதாம், முந்திரி – 25 கிராம் (அரைக்க)
சர்க்கரை – அரை டம்ளர்
மில்க் மெயிட் – சிறிய டின் (அ) இரண்டு குழிக்கரண்டி
பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா ஐந்து (வறுத்து சேர்க்க)
கிஸ்மிஸ் பழம் (கருப்பு) – எட்டு
நெய் – மூன்று தேக்கரண்டி
குங்குமப்பூ – ஆறு இதழ்

செய்முறை
தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி ஏலக்காய் சேர்த்து சற்று திக்காக ஆகும் வரை காய்ச்சிக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பொடி சேமியாவை போட்டு கருக விடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள முந்திரி மற்றும் பாதாமை அரைத்து வைக்கவும். மீதமுள்ள முந்திரி, பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கவும். கடைசியாக கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.

பாலில் அரைத்த முந்திரி, பாதாம் விழுதினை சேர்த்து காய்ச்சவும். அதனுடன் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்த்து கொதிக்க விடவும்.
பால் சிறிது நேரம் கொதித்ததும் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ் ஆகியவற்றை சேர்க்கவும்.

அதன் பின்னர் பாலுடன் சர்க்கரை மற்றும் மில்க் மெயிடை ஊற்றி அடிப்பிடிக்க விடாமல் கிளறி விட்டு கொதித்ததும் இறக்கவும்.
கடைசியாக அதன் மேல் சாஃப்ரானை தூவி விடவும். சுவையான சேமியா பாயசம் ரெடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.