சேமியா துவரம்பருப்பு பாத்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
semiya dhall path

சேமியா துவரம்பருப்பு பாத்

தேவையானவை:
சேமியா – ஒரு கப்,
துவரம்பருப்பு – அரை கப்,
மஞ்சள்தூள், வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – ஒன்று,
கீறிய பச்சை மிளகாய் – 2,
பூண்டு (நசுக்கியது) – 4 பல்,
கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
பட்டை – சிறு துண்டு ,
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
துவரம்பருப்புடன் மஞ்சள்தூள், வெந்தயம், சீரகம், பெருங்காயம் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். சேமியாவை என்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… அது சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
அதனுடன்… நசுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் 2 கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வேக வைத்த துவரம்பருப்பு, வறுத்த சேமியா ஆகியவற்றை அதில் சேர்த்து, (கேஸ்) அடுப்பை ‘சிம்’மில் வைத்து மூடி, வேக விடவும். வெந்ததும் கிளறி, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும்.

துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீரை மட்டும் பயன்படுத்திக் கூட செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.