
சேமியா குல்பி
தேவையானவை:
சேமியா – அரை கப்,
பால் – ஒரு லிட்டர்,
சோளமாவு – 2 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – அரை கப்,
வெனிலா எசன்ஸ் – 3 சொட்டு.
செய்முறை:
சேமியாவை வறுத்து, வேக வைத்து ஆற விடவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி, கரைத்த சோளமாவைச் சேர்க்கவும். அந்தக் கலவையை சிம்மில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.
திரண்டு கெட்டியாக வரும்போது சேமியாவை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி எசன்ஸ் சேர்த்து, ஆற விட்டு குல்பி ‘மோல்டி’ல் விட்டு, ஃபிரிட்ஜில் வைக்கவும். குல்பி ‘மோல்டு’ இல்லையென்றால், சிறுசிறு கிண்ணங்களில் விட்டு, ஃபிரிட்ஜில் வைக்கலாம். அவை நன்கு இறுகி ‘செட்’ ஆனதும் வெளியே எடுத்து, தட்டில் வைத்துக் கவிழ்த்து எடுத்தால் குல்பி தயார்.
விருப்பட்டால் பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்க்கலாம்.