
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தொட்டேஅள்ளி கிராமத்தில் மருமகளின் கள்ளக்காதலனை மாமனார் அடித்துக் கொண்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சீனிவாசன் என்பவருக்கும், லட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு லட்சுமி, கட்டட தொழிலாளியான முரளி என்பவருடம் பழகிவந்துள்ளார். அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதை அடுத்து, கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் உறவில் இருந்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் தெரியவந்ததும் மனமுடைந்த சீனிவாசன் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அப்பெண்ணின் கள்ளக்காதலன் முரளி ரத்த காயங்களுடன் இறந்த கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டர்.
இதனிடையே சீனிவாசனின் தந்தை காவல்துறையில் சரணடைந்தார். தனது மருமகளின் கள்ளக்காதலால் மகன் இறந்துவிட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் முரளியை அடித்து கொலை செய்துவிட்டதாக காவல்துறையிடம் தெரிவித்தார்.



