பயங்கரவாதிகளின் களமாகிவிட்ட தமிழகம்! சென்னையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!

Published:

nia - 2026

இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகளின் களமாகிவிட்ட தமிழகத்தில் அடிக்கடி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம், மாநிலங்களுக்கு இடையேயான நெட்வொர்க் கடந்து அண்டை நாடுகளுடனான பயங்கரவாதத் தொடர்புகளும் வெளிப்பட்டு வருகிறது.

தற்போது, கடலூர், தூத்துக்குடியை தொடர்ந்து சென்னையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான ஷமீம், தௌபிக் இருவரும் தங்கி இருந்ததாகக் கூறப்படும் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, அப்துல் சமீம் மற்றும் தௌபிக் ஆகியோர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரு வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற அனுமதி கேட்டு தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதிக்கும், நீதிமன்றத்துக்கும் மனு அளித்தனர்.

இதை அடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி மற்றும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.  கொலை வழக்கு தொடர்பாக குமரி மாவட்ட போலீசார் சேகரித்து வைத்திருந்த ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான ஷமீம், தௌபிக் இருவரும் பாத்திமா வீட்டில் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் நடத்தப் பட்ட சோதனையைத் தொடர்ந்து சென்னை நெற்குன்றத்தில் அன்பரசன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு விநியோகம் செய்த விவகாரம் தொடர்பாக சென்னை, சேலம், காயல்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, கடலூர், சேலம், நெய்வேலி, திருச்செந்தூர் உள்ளிட்ட 6 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related articles

Recent articles

spot_img