அதிர்ச்சி: கையில் மகளின் தலையோடு தெருவில் நடந்த தந்தை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
up - 2026

சர்வேஷ் குமார் என்ற நபர் உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தாய் மாவட்டம் பண்டதரா கிராமத்த்தில் வாழ்ந்து வரும் நிலையில் தனது 17 வயது மகளின் தலையை துண்டாக வெட்டி இவர் கையில் எடுத்து நடந்து வருவதை கண்ட கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளதை அடுத்து இரண்டு போலீஸ் அதிகாரிகள் கிராமத்துக்கு வந்து சாலையில் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்த சர்வேஷ் குமாரை மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்நிலையில், போலீசார், சர்வேஷ் குமாரிடம் பெயர் என்ன, எங்கிருந்து வருகிறார், கையில் இருப்பது யாருடைய தலை உள்ளிட்ட பல தகவல்களை கேட்டபோது சிறிது கூட தடுமாற்றம் இல்லாமல் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்த சர்வேஷ் குமார், எனது மகளின் காதல் விவகாரம் எனக்கு பிடிக்கவில்லை.

அதனால் தான் அவரின் தலையை வெட்டி எடுத்துவிட்டதாக ஒப்புக்கொண்டது வீடியோவில் பதிவாகியுள்ள நிலையில் “நான் தான் கொலை செய்தேன் அப்போ யாருமே அங்கு இல்லை, உடம்பு ரூமில் கிடக்கிறது” என்று கூறுகிறார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேசம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்றப்பதிவாணையத்தின் தகவல்கள் கூறும் நிலையில் சர்வேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.