சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
கொல்கட்டாவில் 2 பயிற்சி மருத்துவர்கள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் அதை கண்டித்து சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவ மனையில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களும் இணைந்து இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன், இரண்டு மருத்துவர்களைத் தாக்கிய மர்ம நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்! பின் இந்திய மருத்துவமனைகளுக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மோடி அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் சார்பாக கோரிக்கை வைத்தனர்!




