பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கையில் பார்த்தேன்: பிரதமர் மோடி!

இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modi in sco - 2026

தாம் இலங்கைக்குச் சென்றிருந்த போது, பயங்கரவாதத்தின் கோர முகத்தை கண்டு வருந்தியதாகவும், பங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க எஸ்சிஓ நாடுகள் அக்கறை காட்ட வேண்டும் என்றும் கூறினார் பிரதமர் மோதி.

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருநாள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!

அப்போது பேசிய அவர், பயங்கரவாதத்தின் தீமைகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட ஒரு சமுதாயம் உருவாக இந்தியா எப்போதுமே முன்னுரிமை அளித்து வருகிறது என்று சுட்டிக்காட்டினார் பிரதமர் மோதி.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் இலங்கைக்கு சென்றிருந்தபோது கொழும்பு நகரில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் அப்பாவி மக்களின் உயிர்களைக் கொத்துக் கொத்தாக கொன்று குவித்த பயங்கரவாதத்தின் கோரமுகத்தை என்னால் காண முடிந்தது என்று வருத்தம் மேலோங்க எடுத்துரைத்தார் பிரதமர் மோதி.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள், துணைபுரியும் மற்றும் நிதியளித்து ஆதரவளிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு அக்கறை காட்ட வேண்டும் என பிரதமர் மோதி வலியுறுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.