நைஜீரியா: 500 பேரைக் கடத்தியது போகோ ஹராம்!

உலகம்

nigeria டமாஸாக்: நைஜீரியா நாட்டில்,பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹராம் அமைப்பு, அங்கே தொடர்ந்து அரசுக்கு எதிராக பல்வேறு வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனர். பெண்கள் குழந்தைகள் என பலரை ஆயுத முனையில் கடத்திச் சென்று விடுகின்றனர். இந்நிலையில் நைஜீரியாவின் டமாஸாக் நகருக்குள் செவ்வாய்க்கிழமை புகுந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 50 பேர் பலியாயினர். அதன் பின்னர் இளம்பெண்கள், குழந்தைகள் சிறுவர் சிறுமியர் என சுமார் 500 பேரை அவர்கள் கடத்திச் சென்றனர். இது குறித்து, அரசின் செய்தித் தொடர்பாளர் மைக் ஒமேரி, இந்த எண்ணிக்கை குறைவாகவும் இருக்கலாம், ஆனால் துல்லியமாக எத்தனை பேர் கடத்தப் பட்டனர் என்று தெரியவில்லை என்றார். இந்தப் பகுதியை இந்த மார்ச் மாதத் துவக்கத்தில்தான், நைஜர் மற்றும் சாத் ராணுவத்தினர் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டனர். மீண்டும் பயங்கரவாதிகள் இப்பகுதியினரைக் கடத்திச்சென்றுள்ளனர். போர்னோ மாநிலத்தில் நைஜர் எல்லையில் அப்பகுதியின் முக்கிய நகரான மைடுகுரியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த டமாஸாக் நகரம். கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.