ஆரோக்கிய சமையல்: கவுனி அரிசி புட்டு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Kauni rice pudding - 2026

கவுனி அரிசி புட்டு
தேவையான பொருட்கள்

கவுனி அரிசி – 1 கப்
சர்க்கரை -3/4 கப்
தேங்காய்த்துறுவல் – 1/4 கப்
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

கவுனி அரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் நீரை வடிகட்டி ஈரம் போக உலர்த்தவும்.

உலர்ந்த பின் அரிசியை மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
அதன் வெறும் கடாயில் ஈரம் போக வறுத்து ஆறவைத்து சலிக்கவும்.

சலித்த மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து சிறிது சிறிது நீர் சேர்த்து பிசிறவும்.
மாவை கையால் பிடித்தால் பொலபொலவென்று உதிரவேண்டும்.

அதனை இட்லி பாத்திரத்தில் ஆவியில் 15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
அதனுடன் மேற்கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.