சந்தேகம்.. அடித்து உதைத்தக் குடிகார கணவன்! தம்பியுடன் சேர்ந்து சிலிண்டரால் தலையைப் பிளந்த மனைவி!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
murder-1
murder-1

குடிகார கணவனை தம்பியுடன் சேர்ந்து மனைவி திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மைலாப்பூரில் உள்ள பட்டுநூல்காரன் தெருவைச் சேர்ந்தவர் கபாலி (48). அவருக்கு வனிதா (42) என்ற மனைவியும், ஒரு மகனும், மக்களும் உள்ளனர்.

வீடுகளுக்கு பெயிண்ட் அடிப்பது, வெல்டிங் போன்ற வேலைகளைப் பார்த்து வந்த அவர், சனிக்கிழமை தனது வீட்டில் இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது சொந்தக்காரப் பெண்
முத்துலட்சுமி போலிஸில் புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலிஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

மேலும் அவரது உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவம் குறித்து, பல்லாவரத்தில் தனது தாயின் வீட்டில் இருந்த மனைவி வனிதாவை அழைத்துவந்து போலிஸ் விசாரணை செய்தனர்.

அப்போது, அவர் கொடுத்த வாக்குமூலம் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. தனது கணவன் தன்னை நடத்தையில் சந்தேகப்பட்டு, தினமும் குடித்துவிட்டு வந்து சித்திரவதை செய்துவந்ததாகவும், ஒரு கட்டத்தில் கொடுமையை பொறுக்கமுடியாமல் தனது தம்பியுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

சம்பவம் நடந்த அன்று (வெள்ளிக்கிழமை) இரவு திட்டமிட்டபடி தனது தம்பி சாந்தகுமாரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது கபாலிக்கும் சாந்தகுமாருக்கும் சண்டை முற்றியுள்ளது.

தனது அக்காவை தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்ட சாந்தகுமார், பின்னர் அங்கு இருந்த சமையல் சிலிண்டரை தூக்கி கபாலியின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு வந்துள்ளார். இதனை மொத்தமாக போலிஸில் ஒப்புக்கொண்டார் வனிதா.

இந்நிலையில், வனிதா மற்றும் அவரது தம்பி சாந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து போலிஸ் அடுத்தக்கட்ட விசாரணையை நடத்திவருகிறது.

இதற்கிடையில், பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில், கபாலி தலையில் மிக கனமான அடி விழுந்ததால், உள்ளுக்குள் மூளை சிதறி, கண், காது, மூக்கு ஆகியவற்றிலிருந்து இரத்தம் வெளியேறி இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.