அதிமுக., பாஜக., கூட்டணிக்கு ஆதரவு: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு அறிவிப்பு!

சற்றுமுன்
devendrakulavelalar - 2026

சட்டமன்ற தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணிக்கு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவிப்பதாகவும், பட்டியல் சமூகத்தில் இருந்து வெளியேற்றுமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறினர்.

மதுரை செய்தியாளர்கள் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த மாமள்ளர் கபிலன், ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் அரசாணை மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றித் தந்த மத்திய அரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தார்மீக ஆதரவு அளிப்பதாக முடிவு எடுத்து உள்ளோம்.

தேவேந்திர குல வேளாளர் அரசாணை நிறைவேற்ற பரிந்துரை செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிறைவேற்றி தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம். விரைவில் பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் வெளியேற்றம் என்பது தான் எங்களது முதன்மையான கோரிக்கை என தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.