கோமாளிகளின் ஆட்சியா? கொடுங்கோல் ஆட்சியா? துண்டுச் சீட்ல கரீட்டா படிச்சி சொல்லுங்க!

அடடே... அப்படியா? புகார் பெட்டி
stalin

அதிமுக ஆட்சியை கோமாளிகளின் ஆட்சி என்று திமுகவின் விளம்பரம் ஒன்று கூறுகிறது.

திமுகவின் மற்றொரு விளம்பரமோ அதிமுக ஆட்சியை கொடுங்கோல் ஆட்சி என்று கூறுகிறது.

இதிலிருந்தே தெரிகிறது திமுக எந்த அளவுக்கு குழம்பிப் போயிருக்கிறது என்பது.

அதிமுக ஆட்சியை கோமாளிகளின் ஆட்சி என்று சொன்னாலோ, கொடுங்கோலர்களின் ஆட்சி என்று சொன்னாலோ அது எடுபடாது. ஏனெனில் இரண்டுமே பொருத்தமற்ற விமர்சனங்கள்தான்.

அடுத்ததாக திமுக, தனது முக்கிய ஆயுதமாக நினைத்துக் கொண்டு இருப்பது மத்திய அரசு எதிர்ப்பு மற்றும் பாஜக எதிர்ப்பு.

மத்திய அரசைப் பற்றி, பாஜகவை பற்றி என்ன சொன்னாலும் தமிழர்கள் அப்படியே நம்புவார்கள் என்று திமுக நினைக்கிறது.

தமிழர்களின் பலவீனமாகக் கருதப்படும் தமிழ் உணர்வையும் வட நாட்டவர் எதிர்ப்பையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்தால் அதில் தமிழர்கள் மயங்கி விடுவார்கள் அதன் மூலம் அவர்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என்று கணக்கு போடுகிறது திமுக.

நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து ஏதும் அறிந்திராத அம்மாஞ்சிகள் அல்ல தமிழர்கள்.

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு திமுக இதனை உணரும். இந்த தேர்தலின் மூலம் திமுக கற்கும் மிக முக்கிய பாடமாக இது இருக்கும்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும் என்ற எண்ணம் உடையவர்கள் நாங்கள்(தமிழர்கள் ). நம்புங்கள் நல்லதே நடக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.