ஆந்திர பெண்களுக்கு நற்செய்தி; ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.18,500

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
jagan-andhra
jagan-andhra
  • ஆந்திரா பெண்களுக்கு ஒரு நற்செய்தி.
  • இன்று ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.18,500 போடப்படும்

ஆந்திர பிரதேச அரசாங்கம் புதன்கிழமை ‘ஜெகன் அண்ணா சேயூத்த’ என்ற திட்டத்தை ஆரம்பிக்க உள்ளது. இது குறித்து அமைச்சர் வேணு கோபால கிருஷ்ணா விவரித்தார்.

மாநில அளவில் 45 முதல் 60 வயது வரை உள்ள எஸ்சி, எஸ்டி, பிசி, மைனாரிட்டி பெண்களுக்கு பொருளாதார சுய உதவி ஏற்படுத்துவதற்கு புதன்கிழமை ஆகஸ்ட் 12 ‘ஜெகனண்ணா கைகொடுத்துதவும்’ திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக பிசி நலத்துறை அமைச்சர் வேணு கோபால கிருஷ்ணா அறிவித்தார்.

இதன்படி செவ்வாயன்று மீடியாவோடு உரையாடுகையில் ‘ஜெகனண்ணா சேயூத்த’ திட்டம் மூலம் எஸ்சி, எஸ்டி, பிசி, மைனாரிட்டி பெண்மணிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 18 ஆயிரத்து 750 ரூபாய்கள் நேராக அவர்களின் வங்கிக்கணக்கில் போடப்படும் என்று கூறினார்.

வரும் நான்கு ஆண்டுகளில் அந்தந்த பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு ரூபாய் எழுபத்தைந்தாயிரம் பொருளாதார வசதி கிடைக்கும் என்றார். இதற்காக மாநில அளவில் 20 லட்சம் பெண்களுக்காக ஒரு ஆண்டுக்கு 4,700 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் வேணு கோபால கிருஷ்ணா தெரிவித்தார்.

பிசி நலத்துறை அமைச்சராக தான் இருக்கும்போது முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன்மோகன் ரெட்டி ஏழைகளின் மீதான இந்த திட்டம் தொடங்குவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

மேலும் விஜயவாடா ஸ்வர்ணா பேலஸ் ஹோட்டலில் நடந்த தீ விபத்து துரதிருஷ்டவசமானது என்று கூறி வருத்தம் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்திலிருந்து கொண்டு மக்களை அச்சப்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்.

கோவிடைத் தடுப்பதற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எடுத்துவரும் முடிவுகளை நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் கூட பாராட்டி வருகின்றன என்று அமைச்சர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.