
மதுரையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட திமுக கிளை செயலாளர் உட்பட எட்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
மதுரை ஆத்திக்குளம் பகுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக விபச்சார தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஹேமமாலாவுக்கு தகவல் வந்ததையடுத்து நேரில் சென்று சோதனை செய்தனர்.
அப்போது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி தேவசேரி பகுதியை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் பூசமலை என்பவர் இரண்டு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து 3 பெண்கள் உட்பட எட்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.