
ராமர் கோவில் அரசுப் பணத்தில் கட்டப்பட மாட்டாது என்று ராமஜன்மபூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பித் ராய் நேற்று விடுத்த அறிக்கையில்..
கோடிக்கணக்கான ராம பக்தர்களிடம் இருந்து நன்கொடைகள் பெற்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. மக்களிடம் இருந்து எந்தவிதமான நிதி உதவியும் பெற்றுக் கொள்வோம். அயோத்தியில் ராமர் கோயில் என்பது கடவுளின் பணி. இதற்கு பணம் ஒரு தடையாக இருக்காது

ரூபாய் 10, ரூபாய் 100, ரூபாய் 1000 என்ற மதிப்பில் நன்கொடை ரசீது அச்சடிக்கப்பட்டுள்ளது. நிதி பராமரிப்பில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதில் அறக்கட்டளை உறுதியாக உள்ளது
நன்கொடை எவ்வளவு தொகைக்கு வழங்குகிறார்களோ அதற்கேற்ற நன்கொடை ரசீது வழங்கப்படும். நிதி மற்றும் நன்கொடை திரட்டுவதற்கான பொதுத் தொடர்பு பிரசாரம் மகரசங்கராந்தி நாளில் இருந்து தொடங்கப்படும்.
இந்த பிரச்சாரம் மகா பூர்ணிமா வரை தொடர்ந்து நீடிக்கும் நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் பிரச்சாரம் சென்றடையும். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புடன் இணைந்து இந்தப் பிரச்சாரம் நடக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.