
பிரசவ வலி தாங்க முடியாமல் ஒரு கர்ப்பிணிப் பெண் சாலையிலேயே பெண் சிசுவை பிரசவித்தார்.
இந்த சம்பவம் கர்நூல் மாவட்டம் டோனில் நடந்துள்ளது. கொத்தபேட்டையைச் சேர்ந்த ஓபுலேசம்மா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்தால் குடும்பத்தினர் டோன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அவருக்கு சாதாரண பிரசவம் செய்விப்பதற்காக மருத்துவர் ஊழியர் முயற்சி செய்தார். ஆனால் ஓபுலேசம்மா பிரசவ வலி தாள இயலாமல் சாலைக்கு ஓடி வந்தார். ஆனால் சாலையிலேயே பிரசவம் ஆகிவிடும் என்பதை உணர்ந்த மருத்துவ ஊழியர் உடனே அவரை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் செல்ல முயற்சித்தார்.
அதற்கு அந்த கர்ப்பிணிப் பெண் மறுத்துவிட்டதால் மருத்துவர்கள் சாலையிலேயே அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். ஓபுலேசம்மா சாலையிலேயே பெண் குழந்தையை பிரசவித்தாள். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை மருத்துவர்கள் கூறினார்கள்.