அருமையான தர்பூசணி பொரியல்!

சமையல் புதிது
Watermelon Fry - 2026

தர்பூசணி பொரியல்

தேவையான பொருட்கள்
தர்பூசணியின் தோல் – 2 கப் – பழத்துக்கு நடுவே இருக்கும் வெள்ளை சதைப்பகுதி (நறுக்கியது)
தக்காளி -3
வெங்காயம் -2
வேகவைத்த துவரம்பருப்பு -1 கப்
கடுகு – 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் -. 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய். -5
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
செய்முறை
முதலில் தர்பூசணியை பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத் தூள், மிளகாய் ஆகியவை சேர்த்து தாளித்து பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் நாம் நறுக்கி வைத்துள்ள தர்பூசணி துண்டுகளையும் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி கொள்ளுங்கள். பின்னர் வேக வைத்த துவரம் பருப்பையும் சேர்த்து நன்கு கிளறி கொள்ளுங்கள். இப்பொழுது தர்பூசணி பொரியல் தயாராகிவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.