பீட்ரூட் தயிர்பச்சடி
தேவையானவை:
பீட்ரூட் 1,
பெரிய வெங்காயம் 1,
பச்சை மிளகாய் 2,
தயிர் ஒன்றரை கப்,
உப்பு தேவைக்கேற்ப.
தாளிக்க:
எண்ணெய் 3 டீஸ்பூன்,
கடுகு அரை டீஸ்பூன்,
பெருங்காயம் 1 சிட்டிகை.
செய்முறை:
பீட்ரூட்டை கழுவி, தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாகக் கீறவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைப் போட்டு, பொரிந்து சிவந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
சில நிமிஷங்கள் அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, பீட்ரூட் வெந்ததும் உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி, ஆறியதும் தயிர் சேர்த்துக் கலந்து பரிமாறவும். கண்ணைக் கவரும் இந்த கலர்ஃபுல் தயிர்பச்சடி, குழந்தைகளின் ஃபேவரிட். கேரட்டையும் இதே முறையில் செய்யலாம்.