மதியம் சாதம் மிஞ்சியதா? இதோ அருமையான மாலை டிபன்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்

ரைஸ் கட்லெட்

rice - 2026

தேவையான பொருட்கள் :

வேகவைத்த சாதம் – 1 கப்,
சோள மாவு – 2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
பெருங்காய தூள் – 1/2 டீஸ்பூன்,
வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்,
இஞ்சி – ஒரு துண்டு,
கொத்தமல்லி இலை – 2 டேபிள்ஸ்பூன்,
புதினா இலை – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

rice katlet - 2026


செய்முறை :

கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு, நன்கு பிசைந்து கொள்ளவும். அடுத்து அதில் சோள மாவு, சீரகம், பெருங்காயத்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், கரம்மசாலா, சாட் மசாலா, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்து நன்கு கொட்டியாக பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவில் ஒரு எலுமிச்சை அளவு எடுத்து கட்லெட் போல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சூப்பரான ரைஸ் கட்லெட் ரெடி. தக்காளி சாஸ் மற்றும் கிரீன் சட்னியுடன் பரிமாறவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.