சென்னா மசாலா
தேவையான பொருட்கள்
வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப் ,
நறுக்கிய பச்சைமிளகாய் – 1 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்,
சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன்,
பொரிக்க எண்ணெய்,
உப்பு – தேவைக்கு.
வறுத்து கொர கொரப்பாக அரைக்க…
சீரகம், தனியா – தலா – 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் மேலே தூவி அலங்கரிக்க…
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், கொத்த மல்லித்தழை – தலா 2 டேபிள்ஸ்பூன்,
வெள்ளரி – 3 டேபிள்ஸ்பூன்
துருவிய கேரட் – 2 டேபிள்ஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன் விரும்பினால்
எலுமிச்சைச்சாறு – 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டவும். பாத்திரத்தில் கொண்டைக்கடலையுடன் சோள மாவு, கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய் சேர்த்து பிசைந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து எண்ணெயை வடித்து சூடாக இருக்கும்போதே அரைத்த பொடியை தூவவும். பரிமாறும் முன்பு கிண்ணத்தில் பொரித்த சென்னாவை போட்டு அலங்கரிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து கலந்து பரிமாறவும்