இனி முடியாது: பில்கேட்ஸ் தம்பதி விவாகரத்து செய்ய முடிவு!

உலகம் சற்றுமுன்
bilkets
bilkets

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஒருவரும் மைக்ரோசாப்ட் அதிபருமான பில்கேட்ஸ் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஆகிய இருவருக்கும் திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது தனது மனைவியை அவர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இருவரும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

திருமண பந்தத்தில் இருந்து மட்டுமே விலகுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை மூலம் தொண்டுப் பணிகளில் இருவரும் இணைந்து செயலாற்ற முடிவு செய்ததாகவும் இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்

உலகில் உள்ள அனைத்து நாடுகளின் மக்களும் சுகாதாரமாக வாழ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் என்றும் அதற்காக தாங்கள் இருவரும் இணைந்து தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இனிமேலும் தம்பதிகளாக தங்களால் தொடர முடியாது என்று முடிவு செய்து பிரிய முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் தங்களுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.