7வது முறையாக யாசகம் பெற்று ரூ.10,000; முதியவர் பூல்பாண்டியன் வழங்கல்!

poolpandian madurai - 2026

கொரோனாவால் உலகமே முடங்கி உள்ள நிலையில், பிறரிடம் யாசகம் பெற்று 7வது முறையாக மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் இன்று (31.07.2020) வழங்கியுள்ளார், தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன் எனும் 65 வயது முதியவர்!

முதன் முதலாக மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் கடந்த 18.05.2020 அன்று கொரோனா நிவாரண நிதியாக ரூ.10,000 வழங்கினார். பின்னர் தொடர்ந்து 7 முறை இது போல் ரூ. 10 ஆயிரமாக யாசகம் பெற்ற பணத்தை வழங்கினார். இதுவரை இவ்வாறு ரூ.70,000 மதுரைக்கான நிவாரண நிதியாக இவர் வழங்கியுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக ஊர் ஊராக யாசகம் எடுத்து வரும் பூல்பாண்டியன், தான் பெறும் யாசகப் பணத்தின் பெரும் பகுதியை பல்வேறு நலத்திட்டங்களுக்கு கொடுத்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது.

குறிப்பாக குமரி முதல் காஷ்மீர் வரை 400 பள்ளிகளுக்கு ஒரு பள்ளிக்கு தலா ரூ.5,000 வீதம் என பிரித்துக் கொடுத்து அப்பள்ளிகளுக்குத் தேவையான நாற்காலி மேசைகள், குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் போன்றவைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். மும்பையில் ஒரே நாளில் 20,000 மரக் கன்றுகள் வழங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

தன் வாழ்வில் பெரும் பகுதியை யாசகம் பெற்றே வாழ்ந்துள்ள பூல்பாண்டியன், அந்தப் பணத்தை சுயமாக தனக்கே வைத்துக் கொள்ளாமல், அது ஏழை, எளிய மக்களுக்கும், இந்த சமூகத்திற்கும் பயன்பட வேண்டும் என்று பல்வேறு உதவிகள் செய்தார். எனினும், கொரோனா காலத்தில் ரூ.10,000 அவர் முதல் முறையாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது அனைவரது பாராட்டையும் பெற்றது.

தொடர்ந்து ஊக்கத்துடன், 7 முறை இதுபோல் ஆட்சியர் அலுவலகத்தில் ரூ. 70 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியில் சேர்த்துள்ளார் பூல்பாண்டியன்!

  • செய்தி: ரவிசந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories