அன்றும், இன்றும்: பொன்குடம் மண்குடமானது..!

சற்றுமுன் தமிழகம்
Politics
Politics

பொங்கல் பரிசு வழங்கப்பட்டபோது ரேஷன் கடைகள் முன்பு அதிமுகவினர் பேனர் வைத்திருந்ததற்கு திமுக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தது. உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்ததால், பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டது.

அதன்பின்னரும் சில இடங்களில் பேனர் வைக்கப்பட்டிருந்ததால், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பொங்கல் பரிசு வழங்கும் ரேசன் கடைகள் முன்பு வைக்கப்பட்டிருக்கும் அதிமுக பேனர்களை அகற்றக் கோரி திமுக சார்பில் தலைமை நீதிபதி அமர்வு முன் முறையிடு செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய திமுக ஆட்சியில், கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் ரேசன் கடைகள் முன்பாக திமுகவினர் பேனர் வைத்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் அதிமுகவினர் வைத்த பேனர்களுக்கு அத்தனை எதிர்ப்பு காட்டிய திமுகவினர், இன்று தாங்களே பேனர் வைத்துக்கொள்வது குறித்து, தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ”மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்”என்று கமெண்ட் செய்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.