ஒரு போட்டோ போடக் கூடாதாடா..? நொந்து போன மனோபாலா!

உள்ளூர் செய்திகள் சினிமா சென்னை
manobala
manobala

நடிகர் மனோபாலா வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அதுகுறித்து அவரே விளக்கமளித்துள்ளார்.

இயக்குனராக சினிமாவில் களமிறங்கிய மனோபாலா, பின்னர் சிறந்த நடிகராகவும் உருவெடுத்தார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மனோபாலா நேற்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்
அதில் அவர் சோர்வாக மருத்துவமனையில் இருப்பது போல் தெரிந்ததால், அந்தப் புகைப்படத்தைப் பார்த்த அனைவரும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைத்து விரைவில் நலம் பெறுங்கள் என்றவாறெல்லாம் கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த விவகாரம் சமூக ஊடங்களில் பேசுபொருளாகவும் மாறியது.
எனவே மனோபாலா இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ளார்.

‘என் அன்பு மக்களே.. நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல.. நான் நல்லாதான் இருக்கேன்.. ஒண்ணுமில்லை… அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.