December 6, 2025, 1:56 PM
29 C
Chennai

உடலில் கேடா? சாப்பிடுங்க அவகெடொ!

avocado
avocado

நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அவகோடா பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆனைக்கொய்யா அல்லது வெண்ணெய் பழம், பால்டா, வெண்ணெய் பேரி உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இந்த பழத்தில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கி உள்ளன.

ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி தோல் மற்றும் முடி சேதம் மற்றும் சிதைவுக்கான முக்கிய குறைபாடுகளை போக்குகிறது. அரிக்கும் தோலழற்சி, முகப்பரு போன்ற தோல் நிலைகளை சரி செய்யவும், சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை மேம்படுத்தவும், சருமத்திற்கு இளமை தோற்றத்தை அளிக்கவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

அவகெடொ எனப்படும் பழம் மெக்சிகோ மற்றும் பியூப்லா நகரங்களில் அதிகம் காணப்படுகிறது. அவகெடொவின் சுவை இனிப்பு, இது இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. வெண்ணெய் பழத்தில் அதிக கொழுப்பு அமிலங்கள் (fatty acids) உள்ளன.

வெண்ணெய் பழத்தில் உள்ள கொழுப்புகள் (cholesterol) மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. வெண்ணெய் பழம் அலிகேட்டர் பேரிக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இதனை சிலர் பேரிக்காய் (pear) எனவும் கூறுவர். வெண்ணெய் பழம் பச்சை நிறத்தில் இருக்கும். அதன் தோலும் வடிவமும் கொய்யா போன்று காட்சி அளிக்கிறது.

வெண்ணெய் பழத்தில் பெரும்பாலான கொழுப்பு அமிலங்கள் (fatty acids) காணப்படுகின்றன. பெரும்பாலும், மக்கள் வெண்ணெய் பழம் சாப்பிடுவதால் கொழுப்பு (cholesterol) அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் இவ்வாறு எண்ணுவது தவறாகும். வெண்ணெய் பழத்தை காட்டிலும் பாலில் அதிக கொழுப்பு அமிலம் (cholesterol fatty acids) உள்ளது. வெண்ணெய் பழத்தை சாலடாகக் செய்து சாப்பிடலாம். அவகெடொ பழத்தைக் கொண்டு அல்வா செய்தும் உட்கொள்ளலாம். காரமான பொருட்களுடனும் கலந்து சாப்பிடலாம். அவகெடொ பழத்தை மற்ற பழங்களுடனும் சேர்த்து உட்கொள்ளலாம் . நீரிழிவு நோயாளிகளும் இந்த பழத்தை சாப்பிடலாம். இது உடல் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றது.

வெண்ணெய் பழத்தில் விட்டாமின் K காணப்படுகிறது, இது மிகவும் நன்மை பயக்கும் ஒரு வசை விட்டாமின் ஆகும். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் அவசியமான ஒன்று.

உணவை ஜீரணிக்க உதவுகிறது.
முடி மற்றும் முகத்தை அழகுபடுத்துவதற்கு துணை புரிகின்றது .
வாயிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தை நீக்க உதவுகிறது.
எலும்புகளை பலப்படுத்துகிறது.
நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது, புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் இவை மிகுந்த நன்மை பயக்கின்றன.
வெண்ணெய் பழம் கல்லீரலுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில், ​ அதிக வாந்தி எடுக்கின்றனர் மற்றும் குமட்டல், தலைச் சுற்றுதல் போன்றவற்றை உணர்கிறார்கள். இந்த நேரத்தில், வைட்டமின் பி 6 கொண்டுள்ள வெண்ணெய் பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு நன்மைகள் விளைகின்றன.

வெண்ணெய் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி 6, வைட்டமின் கே, வைட்டமின் இ, போன்ற உடலுக்கு மிகவும் தேவையான பல வைட்டமின்கள் உள்ளன.

இந்த வைட்டமின் சத்துக்களால் நம் உடல்களில் ஏற்படக்கூடிய கை, கால் வீக்கங்களை குறைத்துவிடும். ஆர்த்ரடிஸ் நோய் வராமல் தடுக்க தினமும் அவகோடா பழத்தை எடுத்துக்கொண்டால் இந்த நோய் விரைவில் குணமாகும்.

நீரிழிவு நோயின் விளைவைக் குறைக்க வெண்ணெய் பழம் மிகவும் உதவுகிறது.
வெண்ணெய் பழம் உடலில் உள்ள கொழுப்பின் (cholesterol) அளவைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கின்றது.

வெண்ணெய் பழத்தில் உள்ள கால்சியம், இரும்பு, பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, முதலியன உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவும் தாதுக்களாகும்.

வெண்ணெய் பழம் தோல் நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
முடி பிரச்சினைகளை குறைக்கிறது.
இதய நோய்களை குணப்படுத்துகிறது.
கீல்வாத நோயிலிருந்து விடுபட வெண்ணெய் பழம் மிகவும் உதவுகிறது.

அவகோடா பழ எண்ணெய் அடிப்படையிலான தயாரிப்புகள் நம் சருமத்திற்கு எவ்வாறு உதவுகின்றன என்பது குறித்த பல ஆய்வுகள் சிறந்த முடிவுகளை காட்டியுள்ளன.

அவகோடா எண்ணெயில் வைட்டமின் ஈ தவிர பொட்டாசியம், லெசித்தின் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருப்பதால் சருமத்தை ஈரப்பதமாகவும், ஊட்டமாகவும் வைத்திருக்கும். மேல்தோல் என்றழைக்கப்படும் தோலின் வெளிப்புற அடுக்கு இந்த எண்ணெயில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்சிவிடும். இது புதிய சருமத்தை உருவாக்க உதவுகிறது.

வயது ஏறி கொண்டே செல்வதற்கான முதல் மற்றும் பொதுவான அறிகுறி தோலில் தான் தோன்றும். இந்த பழத்தில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையைத் தக்க வைத்து, இளமையான தோற்றத்தை பராமரிக்க உதவுகிறது.

முக சுருக்கங்களுக்கு அவகோடா ஆயிலை பயன்படுத்துவது மிகவும் சிறந்த வழி. இதை மேற்பூச்சாகப் பயன்படுத்தும் போது, தோல் வறட்சியை எதிர்த்துப் போராடும். மேலும் கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கக்கூடும்.

ஃப்ரீ ரேடிக்கல்ஸ் ஏஜ் ஸ்பாட்ஸ் எனப்படும் சரும சுருக்கங்கள் மற்றும் தோல் புற்றுநோய் போன்ற தீவிரமான மற்றும் அனைத்து வகையான தேவையற்ற தோல் மாற்றங்களுக்கும் காரணமாக அமைகின்றன. எனவே ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த அவகோடா ஆயிலை சருமத்தின் மேல் பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற தோல் மாற்றங்களுக்கான வாய்ப்புகளை குறைக்க முடியும்.

அவகோடா ஆயிலில் காணப்படும் பீட்டா கரோட்டின், புரதம், லெசித்தின், கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, டி மற்றும் ஈ ஆகியவை உங்கள் சருமத்தை புற ஊதா கதிர்களை சேதப்படுத்தாமல் ஈரப்படுத்தவும் பாதுகாக்கவும் உதவுகின்றன. தவிர்க்க முடியாத காரணங்களால் கடும் வெயிலில் வெளியே செல்லும் போது ஏற்படும் சருமம் சிவப்பது உள்ளிட்ட எதிர்மறையான விளைவுகளை குறைக்க உதவும்.

அவகோடா ஆயில் சரும கோளாறுகளுக்கு மட்டுமல்லாமல் காயங்களை குணப்படுத்தவும் உதவும். இதில் உள்ள லினோலிக் அமிலம், ஒலிக் அமிலம் மற்றும் பிற மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் காயம் குணமடையும் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

இந்த எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சியுடன் தொடர்புடைய வறண்ட, எரிச்சல் மிக்க சருமத்தை குணப்படுத்த உதவும்.

அவகோடா ஆயிலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சருமத்தின் மேல்தோல் எளிதில் ஈர்த்து கொள்ளும் என்பதால், இந்த ஆயிலை சருமத்தில் அப்ளை செய்து விட்டு, சிறிது நேரம் கழித்து வெதுவெது நீரில் கழுவும் போது, சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும் அவகொடா ஆயில். இது முகப்பரு அபாயத்தை குறைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories