ஆரோக்கிய சமையல்: முருங்கைப்பூ பொரியல்!

Published:

Drumstick Fry
Drumstick Fry

முருங்கைப் பூ பொரியல்

தேவையான பொருட்கள்

ஒரு கப் முருங்கை பூ
பத்து சின்ன வெங்காயம்
ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள்
ஒரு தேக்கரண்டி தேங்காய் துருவல்
உப்பு
தாளிக்க-
(கருப்பு உளுந்து பருப்பும் சேர்க்கலாம்)
கடுகு
எண்ணை
உளுந்து பருப்பு
கடலை பருப்பு
கறிவேப்பிலை

செய்முறை

முதலில் முருங்கை பூவை சுத்தம் செய்து எடுக்கவும். (காம்புகள் எல்லாம் சுத்தமாக அகற்ற வேண்டும்)

சின்ன வெங்காயம் எடுத்து பொடியாக வெட்டி வைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்பு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை பூவை சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும்.
மிதமான சூடு போதுமானது. திறந்து பார்த்து, உப்பு சரியாக உள்ளதா என பார்த்த பின், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து, அடுப்பை அணைக்கவும்.
இந்த பொரியல் செய்வது மிகவும் எளிது. இதே போல் முருங்கை இலை யிலும் செய்யலாம். ஆனால் சுத்தம் செய்வது தான் கொஞ்சம் கடினம்.
சத்துக்கள் நிறைந்த, சுவையான முருங்கை பூ பொரியல் தயார்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

Related articles

Recent articles

spot_img