உங்கள் கடவுச்சொல் பிறர் கடத்துமாறு உள்ளதா? கவனம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தொழில்நுட்பம்
password
password

கடந்த ஒரு ஆண்டாக பயனாளர்களால் அதிகம் கொடுக்கப்பட்ட 10 பாஸ்வேர்ட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் நீங்கள் கொடுத்த பாஸ்வேட்டும் இருந்தால் உடனடியாக மாற்றுவது நல்லது.

நிறைய பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் பலரும் எளிமையானவற்றை பாஸ்வேர்டாக கொடுப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டு எளிமையாக, பொதுவாக வைக்கப்பட்ட பாஸ்வேர்ட்களின் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் தற்போது 10 பாஸ்வேர்ட்கள் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது.

10 பாஸ்வேர்ட்களின் பட்டியல்

123456

123456789

querty

password

111111

12345678

abc123

1234567

password1

12345

பலரும் எளிமையாக நினைவில் வைத்துக் கொள்ள இதுபோன்ற பாஸ்வேர்டுகளை வைக்கின்றனர்.

ஆனால் இப்படிப்பட்ட பாஸ்வேர்ட்கள் ஹேக் செய்வதற்கு எளிமையாக இருக்கும்.

அதனால் எளிமையான பாஸ்வேர்டுகள் வைப்பது ஆபத்து. ஆங்கில எழுத்து, எண்கள், சிறப்பு குறியீடுகளுடன் கூடிய பாஸ்வேர்ட் பாதுகாப்பானதாக இருக்கும் என சைபர் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதே போல் பிறந்த வருடத்தை பாஸ்வேர்டாக வைப்பது, பாஸ்வேர்ட்டை மொபைல் போனில் சேமித்து வைப்பது ஆகிய செயல்பாடுகளும் ஆபத்து என்பதே வல்லுநர்களின் கருத்து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.