தெற்கு ரயில்வேயில் பணி! ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்!

சற்றுமுன் தமிழகம் வேலைவாய்ப்பு
sengottai railwaystn5
sengottai railwaystn5

தமிழகத்தில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பணிக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு தகுதியும் ஆர்வமும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். ரயில்வே வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூரில் மொத்தம் 936 காலி இடங்கள் உள்ளன. மத்திய தொழிற் கூடங்கள், பொன்மலையில் மொத்தம் 756 காலி இடங்களும் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற் கூடம், போத்தனுரில் 1686 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுடைய நபர்கள் 15 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்களின் வயதை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதார்கள் 10 ஆம் வகுப்பு அல்லது ஐஐடி தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவரும் 10 ஆம் வகுப்பு அல்லது ஐஐடி யில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மெரிட் பட்டியல் அடிப்படையில் விண்ணப்பித்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு முகமுடைய நபர்கள் ரூபாய் 100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST / PwBD / பெண்கள் இவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் sr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் 01.06.2021 முதல் 30.06.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: Microsoft Word – Act. App. Notification -2021.docx (iroams.com)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.