ஆரோக்கிய சமையல்: கீரை பொரியல்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
kirai poriyal - 2026

கீரை பொரியல்

தேவையான பொருட்கள்

அரைக் கீரை – 1 கட்டு;
பெரிய வெங்காயம் – 1;
காய்ந்த மிளகாய் – 5;
கடுகு – கால் தேக்கரண்டி;
கடலைப் பருப்பு – கால் தேக்கரண்டி; உடைத்த உளுந்து – கால் தேக்கரண்டி; எண்ணெய் – 2 தேக்கரண்டி;
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி;
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
கீரையை சுத்தம் செய்து, நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும். காய்ந்த மிளகாயை நறுக்கி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் சிவக்கும் வரை நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கீரையைப் போட்டு வதக்கவும். பின்னர் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும். கீரையில் உள்ள தண்ணீர் சுண்டி, கீரை நன்றாக வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து லேசாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

கீரை நிறம் மாறாமல் இருக்கக் கால் தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கலாம். கீரையை மூடி வைக்காமல் மிதமான நெருப்பில் வேக வைப்பதனால் கீரையில் உள்ள சத்துக்கள் அழியாமலும், நிறம் மாறாமலும் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.