யூரோ 2021: காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள்…

உலகம் விளையாட்டு
euro cup 2021
euro cup 2021

நாள் 14 : யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் 2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

யூரோ 2020 காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.

ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் 16ஆவது பதிப்பான யூரோ 2020 ஜூன் 11 அன்று ஐரோப்பா முழுவதும் 11 முக்கிய நகரங்களில் போட்டிகளுடன் தொடங்கியது. போட்டியின் 60 ஆண்டு வரலாற்றில் இவ்வாறு பல நகரங்களில் நடப்பது இதுவே முதல் முறை. குழு நிலைப் போட்டிகள் முடிந்துவிட்டன. இது ‘ரவுண்ட் ராபின்’ முறையில் நடந்தது. இதன் முடிவில், 16 அணிகளுக்கான காலிறுதிக்கு முந்தைய கட்டச் சுற்றுக்கு 16 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

தகுதி பெற்ற அணிகள்

குழுமுதலிடம்இரண்டாமிடம்மூன்றாமிடம்
(சிறந்த நான்கு)
ஏஇத்தாலிவேல்ஸ்சுவிட்சர்லாந்து
பிபெல்ஜியம்டென்மார்க்
சிநெதர்லாந்துஆஸ்திரியாஉக்ரைன்
டிஇங்கிலாந்துகுரோஷியாசெக் குடியரசு
ஈஸ்வீடன்ஸ்பெயின்
எஃப்பிரான்ஸ்ஜெர்மனிபோர்ச்சுகல்

காலிறுதிச் சுற்று ஆட்டங்களில் நேரமும் இடமும்
(இந்திய நேரப்படி)

ஜூன் 26, சனிக்கிழமை – போட்டி 1 – வேல்ஸ் vs டென்மார்க் (இரவு 9:30, ஆம்ஸ்டர்டாம்)
ஜூன் 27, ஞாயிறு (IST) – போட்டி 2 – இத்தாலி vs ஆஸ்திரியா (காலை 12:30, லண்டன்); போட்டி 3- நெதர்லாந்து vs செக் குடியரசு (இரவு 9:30, புடாபெஸ்ட்)

ஜூன் 28, திங்கள் (IST) – போட்டி 4 – பெல்ஜியம் Vs போர்ச்சுகல் (காலை 12:30, செவில்); போட்டி 5 – குரோஷியா vs ஸ்பெயின் (இரவு 9:30, கோபன்ஹேகன்)

ஜூன் 29, செவ்வாய் (IST) – போட்டி 6 – பிரான்ஸ் vs சுவிட்சர்லாந்து (காலை 12:30, புகாரெஸ்ட்); போட்டி 7 – இங்கிலாந்து vs ஜெர்மனி (இரவு 9:30, லண்டன்)

ஜூன் 30, புதன்கிழமை (IST) – போட்டி 8 – சுவீடன் Vs உக்ரைன் (காலை 12:30, கிளாஸ்கோ)

இந்த காலாண்டுக்கு முந்தைய கட்டத்தின் முடிவில், காலிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் முடிவு செய்யப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.