ஊருக்குள் நடமாடும் காட்டு யானைகள்! மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்
elephant 1 - 2026

கோவை புறநகர் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், விழிப்புடன் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

கோவை போளுவாம்பட்டி வனசரகத்துக்குட்பட்ட முள்ளங்காடு, சப்பானிமடை மற்றும் கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஐஓபி காலனி, மருதமலை கீழ்ப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

elephant 1 1 - 2026

கோவை புறநகர் பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளிவருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடாகம் பகுதியில் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே தூங்குவதை தவிர்க்கவும், அத்தியாவசியம் என்றால் கைவிளக்குடன் வெளியே செல்ல வேண்டும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.