அதிர்ச்சி: சர்ச்சுகள் கட்ட அரசு நிதி தலா ரூ.5 லட்சம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
ap churches1 - 2026

ஆந்திராவில் சர்ச்சுகள் கட்டுவதற்கு அரசு நிதி வழங்கியுள்ளது.

ஆந்திர பிரதேஷ் குண்டூர், பிரகாசம் மாவட்டங்களில் 4 சர்ச்சுகளைக் கட்டுவதற்கு அரசாங்கத்தில் இருந்து நிதி அளித்து மாநில அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

குண்டூர் மாவட்டத்தில் மூன்றும் பிரகாசம் மாவட்டத்தில் ஒன்றுமாக சர்சுகள் கட்டுவதற்கு ஒவ்வொன்றுக்கும் ரூ 5 லட்சம் அளிப்பதாக அரசாணை வெளிவந்துள்ளது.

குண்டூர் மாவட்டம் நிஜாம்பட்டணம் மண்டலம் ஆமுதாலபல்லி கிராமத்தில் கல்வாரி சர்ச், ஆமுதாலபல்லியில் உள்ள ஹரிஜன்வாடாவில் குளோரியன் சர்சு, காளிபட்டணம் கிராமத்தில் ப்ளௌன்சி சர்சு கட்டுவதற்கு அரசு 15 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது.

ap churches - 2026

சிறுபான்மையினர் நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக சர்ச்சுகளைக் கட்டுவதற்கு நிதி வழங்குவதாக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. இந்த நிதிகளை மண்டல் பரிஷத் டெவலப்மன்ட் ஆபீஸ் வழங்குகிறது.

பிரகாசம் மாவட்டத்தில் டங்குடூரு மண்டலம் கந்துலூரில் நிஸ்ஸீ ரிலீப் சொசைட்டி சர்ச் கட்டுவதற்கு மேலும் ரூ5 லட்சம் அளிப்பதாக மற்றுமொரு அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.