குழந்தைகளுக்கான சத்து மிக்க உருண்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
athipazham - 2026

அத்திப்பழம் நட்ஸ் உருண்டை

தேவையான பொருட்கள் :

உலர்ந்த அத்திப்பழம் –20 உடைத்த முந்திரி, உடைத்த
வால்நட், வெள்ளரி விதை – தலா கால் கப்
ரூட்டி ஃப்ரூட்டி – 50 கிராம்,
பேரீச்சம்பழம் – 15
தேன் – சிறிதளவு.

செய்முறை :

athipazha nats urundai - 2026

உலர்ந்த அத்திப்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் உலர்ந்த அத்திப்பழம், உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை, ரூட்டி ஃப்ரூட்டி, பேரீச்சம்பழத்தை போட்டு நன்கு கலந்து கெட்டியாக உருண்டைகளாக வேண்டிய வடிவில் பிடிக்கவும்.

அத்திப்பழம் நட்ஸ் உருண்டை ரெடி.

மிகவும் சத்துமிக்க இந்த உருண்டையை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.