திருப்பதி உண்டியலில் பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகள்! அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்!

Published:

thirupathi hundi - 2026

திருமலை திருப்பதி உண்டியலில் பாகிஸ்தான் கரன்சி களைக் கண்டு, அதிர்ச்சியும் வியப்புமடைந்தனர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள்!

நித்திய கல்யாணம் பச்சைத் தோரணமாக விளங்கும் திருமலையில் ஆண்டின் 365 நாட்களும் ஸ்ரீவாரி சந்நிதிக்கு நம் நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். பாலாஜியை தரிசித்துச் செல்வார்கள்.

தங்கள் கோரிக்கைகளை தீர்த்துவைக்கும் ‘கோனேடிராய’னை தரிசிப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள். சுவாமியை தரிசித்து கொண்டபின் பக்தர்கள் பல வடிவங்களில் ஸ்ரீவாரி உண்டியல் மூலம் காணிக்கைகளை சமர்ப்பித்துக் கொள்வார்கள். வெளிநாட்டு பக்தர்கள் தங்கள் கரன்சிகளை சுவாமி உண்டியலில் போடுவது உண்டு.

பூமி மீது இருக்கும் அனைத்து நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் தம் தேசத்தின் தொடர்புடைய கரன்சியை தங்கள் வேண்டுதல் நிறைவேறும் வடிவில் செலுத்தி விடுவார்கள். இவ்வாறு தம்மிடமுள்ள வெளிநாட்டு கரன்சிகளை அங்குள்ள உண்டியலில் இட்டுச் செல்வார்கள்.

இவ்வாறு உலகத்தில் மொத்தம் 195 நாடுகள் இருக்கையில் ஸ்ரீவாரி உண்டியலில் 157 நாடுகளின் கரன்சி வந்து சேர்ந்துள்ளது. மலேசியா கரன்சி நோட்டுகள் மிக அதிகமாக 46% வந்துள்ளன. மலேசியா கரன்சிக்கு அடுத்தபடியாக அமெரிக்கா டாலர் உள்ளது. ஸ்ரீவாரி உண்டியலில் அமெரிக்கா டாலர் 16 சதவீதம் இருப்பதாக திதிதி தெரிவித்தது. ஆர்வமூட்டும் அம்சம் என்னவென்றால் ஸ்ரீவாரி உண்டியலில் வந்து சேர்ந்த வெளிநாட்டு கரன்சியில் பாகிஸ்தான் நோட்டுகள் கூட இருக்கிறது என்பது.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்
pakistan rupee - 2026

2019 – 20 ஆண்டில் வெளிநாட்டு கரன்சி வடிவத்தில் திருமலை பெருமாளுக்கு ரூபாய் 27.49 கோடி வருவாய் வந்தது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு கரன்சிகள் குறையும் வாய்ப்பு உள்ளது.

இப்படியிருக்கையில் ஸ்ரீவாரி உண்டியலுக்கு ஒரு பழைய நோட்டு சிக்கல் வந்து சேர்ந்தது. 2016இல் மோடி அரசாங்கம் பெரிய நோட்டுகளை ரத்து செய்தது. அப்போது சில பக்தர்கள் இந்த பெரிய நோட்டுகளை சுவாமி உண்டியலில் செலுத்திச் சென்றார்கள். இவற்றில் ஆயிரம் ரூ நோட்டுகள் 1.8 லட்சங்கள், 500 ரூ நோட்டுகள் 6.34 லட்சம் இருந்தன.

இது மொத்தம் 49. 70 கோடி ரூபாய்கள் வரை உள்ளது. அதாவது சுமார் 50 கோடி ரூபாய்கள். இது மிகப்பெரிய தொகை. இதனால் ஸ்ரீவாரி பெயரில் உள்ள பல தர்ம காரியங்கள் மூலம் பல சேவைகளை செய்யலாம்.

இந்த விஷயத்தைக் கணக்கில் கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மன் ஒய்வி சுப்பா ரெட்டி தலைமையில் திதிதி போர்டு உறுப்பினர்கள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வைக்குக் கொண்டு சென்றார்கள்!

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img