வாட்டர் டேங்க் இடிந்து விழுந்த வீடியோ காட்சி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
water tank
water tank

குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள கிர்சாரா என்ற கிராமத்தில் 40 ஆண்டுகள் பழமையான நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அந்தத் தொட்டி பலவீனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்தத் தொட்டி முழுமையாக இடிந்து விழுந்தது. இந்தக் காட்சிகள் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இச்சம்பவத்தால் தண்ணீர் தொட்டிக்கு அருகில் உள்ள பால்பண்ணை கட்டுமானம் சேதமடைந்தது.

அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தால் எந்த உயிர்சேதம் இல்லை. சம்பவத்திற்கு பிறகு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.