தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

Published:

rain tenkasi
rain tenkasi

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் இது குறித்துக் குறிப்பிட்ட போது, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும், பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

மேலும், மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த மே 4ம் தேதி தொடங்கிய அக்னி நடத்திரம் என்று சொல்லக் கூடிய கத்தரி வெய்யில், 24 நாட்களுக்குப் பின் இன்று நிறைவு பெறுகிறது. இதனால் அடுத்து வரும் நாட்களில் வெய்யிலின் தாக்கம் குறையக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img