
கொரோனா சிறப்பு வார்டு மீண்டும் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படுகிறது என திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சுமார் 60 படுக்கைகளுடன் கொரோனோ தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது,
மேலும் திருச்சி மட்டுமல்லாது பெரம்பலூர்,அரியலூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக அதிக எண்ணிக்கையில் வந்ததால் சிறப்பு மருத்துவமனை வளாகமாக செயல்பட்டு வந்த முழு கட்டிடத்தை தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பிரிவாக மாற்றி இருந்தனர்.
இந்நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், தற்போது வெறும் 12 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர், இதனால் அவசர சிகிச்சைக்காகவும் சிறப்பு மருத்துவமனை வளாகம் செயல்பட்டு வந்த வளாகம் மீண்டும் அதை பயன்பாட்டுக்கு வருகிறது என மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார். அதே நேரம் 60 படுக்கை வசதிகளுடன் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பிரிவு செயல்பாட்டில் உள்ளது.