December 5, 2025, 8:28 PM
26.7 C
Chennai

ஒலிம்பிக்: சாதனையைத் தவறவிட்ட வீரர்கள் (1)

olympics india1 - 2025

ஒலிம்பிக் போட்டிகளில் சாதனையைத் தவறவிட்ட
சில வீரர்கள்(1)
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

நேரத்தின் அருமை

நேரத்தின் அருமை நமக்குத் தெரியவேண்டுமானால் வாழ்க்கையில் சிலரைச் சந்திக்க வேண்டும. ஓர் ஆண்டின் அருமையை உணர வேண்டுமானால் 5 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதால் தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைச் சந்திக்கவேண்டும். அவன் கத்துவான், கதறுவான் ஒரு சிறு கவனக் குறைவால் மீண்டும் படித்த பாடங்களையே ஆண்டு முழுக்கப் படிப்பது எவ்வளவு பெரிய கசப்பு என்று.

ஒரு மாதத்தில் அருமையை உணர வேண்டுமானால் குறைப் பிரவசமாகக் குழந்தைபெற்ற தாய்மார்களைக் கேட்கவேண்டும். குறைப் பிரசவக் குழந்தைகளைத்தான் காப்பாற்றுவதில் எவ்வளவு இடர்பாடுகள்! சென்னையில் ஒரு பிரபல மருத்துவ மனையில் குறைப்பிரசவக் குழந்தையைப் பராமரிக்கச் சராசரியாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள. ஓரிரு மாதங்கள் தள்ளிப் பிறந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். ஒரு வாரத்தின் அருமையை உணர வாரப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைக் கேட்கவேண்டும்.

ஒரு நாளின் அருமையை உணரத் தினக்கூலிகள், அன்றாடங் காய்ச்சிகள், சாலையோர நடைபாதைக் கடைக்காரர்கள், தள்ளுவண்டி வியாபாரிகளைக் கேட்க வேண்டும். -பந்த்- என்கிற பெயரால் தேவையில்லாமல் கதவை இழுத்துச் சாத்துகிற வியாதி இங்கே மிக அதிகம். அனைத்தும் செயல்படாமல் போகின்றபோது கூடவே வருமானமும் போய்விடுகிறது. வியாபாரத்தை வைத்தும் அன்றன்று கிடைக்கிற கூலியை வைத்தும் பிழைக்கிறவர்கள், பந்த் நாட்களில் வயிற்றில் ஈரத் துணியைப்போட்டுக்கொள்ள வேண்டியது தான். இவர்களைக் கேளுங்கள், ஒரு நாளின் அருமையைப்பற்றி விலாவாரியாகச் சொல்வார்கள்.

ஒரு மணி நேரத்தின் அருமையை உணரவேண்டுமா? மருத்துவரைக் கேளுங்கள். இவர்கள் சொல்வார்கள் -சற்றுமுன்பாக அழைத்து வந்திருந்தால் இந்த உயிரை நான் காப்பாற்றியிருப்பேன்- என்று. விபத்தில் சிக்கியவர்களை விபத்து நடந்த நேரம் முதல் மருத்துவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் வரை இருக்கிற நேரத்தை ஆங்கிலத்தில் “GOLDEN HOUR” என்று அழைக்கும் வழக்கு மருத்துவ உலகில் உண்டு. இந்த தங்க நேரத்துக்குள் அடிபட்டவரைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியாமல் போனதால் எத்தனையோபேர் தங்களது இன்னுயிரை இழந்துவிட்டார்கள்.

ஒரு நிமிடத்தின் அருமையை உணர, இரயிலைக் கோட்டை விட்டார்கள் அல்லவா, அவர்களைக் கேளுங்கள். இப்பத்தான் சார் வந்தேன். அதற்குள் அது புறப்பட்டுவிட்டது’ என்பார்கள் பரிதாபமாக. இரயிலின் கடைசிப் பெட்டியைப் பார்த்து பரிதாபமாக ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள்.

cheerindiaolympics - 2025

ஒரு விநாடியின் அருமையை உணர வேண்டுமானால் சாலையில் விபத்தைச் சந்தித்தவர்களைக் கேட்கவேண்டும். -இப்படித்திரும்பிப் பார்ப்பதற்குள் என்னை அடிச்சுத் தூக்கிட்டான்;! என்பார்கள். சிலர் இதைச் சொல்வதற்குக் கூட இருக்கமாட்டார்கள் போய்ச் சேர்ந்து விடுவார்கள்.!

மில்லி செக்கண்ட் என்று ஒரு அளவு உண்டு. பலருக்கு இதைப் பற்றித் தெரியாது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படும் நிலைமையிலும் இவர்கள் இல்லை. அண்மையில் ஆசியத் தடகளத்தில் ஜேதிர்மாயி தங்கம் வென்றது விநாடி இடைவெளிகளில் இல்லை. விநாடியில் நூறில் சில பங்குகளில் தான; பி. டி. உசா ஒலிம்பிக்கில் நாலாவதாக ஓடி வந்ததும் விநாடி இடைவெளிகளில் இல்லை. விநாடியில் நூறில் சில பங்குகளில்தான். எண்ணிப் பாருங்கள் 4 ஆண்டுகள் பயிற்சி செய்து இப்படிச்சுண்டுகிற நேரத்தின் ஒரு பகுதியில் தங்கப் பதக்கத்தை இழந்தால் அவர்களது மனநிலை எப்படி இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories